V4UMEDIA
HomeNewsநானி தயாரித்த முதல் படமே 2 தேசிய விருதுகள் பெற்றுள்ளது!!

நானி தயாரித்த முதல் படமே 2 தேசிய விருதுகள் பெற்றுள்ளது!!



நானியின் அறிமுக தயாரிப்பு AWE சிறந்த மேக் அப் மற்றும் சிறந்த விஎஃப்எக்ஸ் பணிகள் என்ற பிரிவில் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. 66 வது தேசிய திரைப்பட விருதுகளை சிறப்பு படங்களுக்கான ஜூரியின் தலைவர் ராகுல் ராவில் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். தேசிய திரைப்பட விருதுகள் 31 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கீர்த்தி சுரேஷ் மகாநாட்டிக்கு சிறந்த நடிகையாக வென்றுள்ளார்.

Image result for Nani's first production film 'AWE' win 2 National Awards!!

பிரசாந்த் வர்மா இயக்கிய நானி மற்றும் பிரசாந்தி திப்பீர்நேனி தயாரித்த உளவியல் த்ரில்லர் படம் AWE. காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா கசாண்ட்ரா, ஈஷா ரெப்பா, சீனிவாஸ் அவசரலா, பிரியதர்ஷி புல்லிகொண்டா மற்றும் முரளி சர்மா ஆகியோர் நடித்த படம்.

நேச்சுரல் ஸ்டார் நானி தயாரித்த முதல் படமே 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. தனது உற்சாகத்தை பகிர்ந்து கொள்ள நானி தனது டுவிட்டரில், “வால் போஸ்டர் சினிமா குழு இன்று மிகவும் பெருமிதம் கொள்கிறது. எங்கள் அறிமுக தயாரிப்புக்கு 2 தேசிய விருதுகள். நாம் இன்னும் என்ன கேட்க முடியும். எங்கள் நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜூரிக்கு நன்றி மற்றும் அனைத்து விருது வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் #TeluguCinema #Mahanati #AWE #Rangasthalam #ChiLaSow. ”

Most Popular

Recent Comments