
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநடி’ படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வாழ்க்கை வரலாற்று பட வரிசையில் வரலாறு காணாத வெற்றியை தேடி தந்தது.

இந்த படம் பெரிதும் பேசப்பட்டதன் முழு கரணம், கீர்த்தி சுரேஷ் அவர்களின் உன்னதமான நடிப்பும், மேலும் நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களை போன்ற முக வடிவம் மற்றும் தோற்றமும் தான். மேலும் இந்த படத்தினை கொண்டு வந்த கலை நயம், திரைக்கதை, வடிவமைப்பு, ஒளிப்பதிவு, கலை இயக்கம், எடிட்டிங் என அனைத்துமே இந்த படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.

இந்த படத்திற்கு பிறகு சாவித்ரி அவர்களின் பழைய படங்கள் பலரால் பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பல மொழிகளில் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் திறம்பட நடித்த கீர்த்தி சுரேஷ் அவர்கள், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.