நடிகர் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சுஜீத் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சாஹோ’. இந்த பல மொழி அதிரடி திரில்லரில் நடிகர்கள் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், சங்கி பாண்டே மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
சாஹோ ஒளிப்பதிவை மதியும், ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளார். யு.வி கிரியேஷன்ஸ் வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி படம் வெளிவருவதற்கு முன்னதாக, படத்திலிருந்து வரும் நடிகர்களின் கதாபாத்திரப் பெயர்களைக் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். நீல் நிதின் முகேஷ் ஜெயாவாகவும், அருண் விஜய் விஸ்வாங்காகவும், சங்கி பாண்டே தேவ்ராஜாகவும் நடிப்பார் என்பது முன்னதாக தெரியவந்தது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதில் அவர்கள், “காத்திருப்பு முடிந்தது! இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் ஆகஸ்ட் 10 அன்று வெளிவரும்! ”.