தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வளம் வருபவர் சரண். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த படம் ‘சகா’. இவர் பல படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் ‘கடல்’. இதை தொடர்ந்து இவர் விஸ்வரூபம், ஜில்லா, சிகரம் தோடு, வை ராஜா வை, மோ மற்றும் வட சென்னை படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவின் ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மட்டுமின்றி கன்னட படத்திலும் நடித்து வருகிறார் என்பது அண்மைய செய்தி மற்றும் எவரும் அறியாத ஒரு செய்தியும் கூட. இவர் கன்னடத்தில் வெற்றிபெற்ற படமான கேஜிஎஃப் படத்தில் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டு வருகிறது, 5 நாட்களுக்கான படப்பிடிப்பை இவர் தற்போது முடித்துள்ளார்.