
நடிகர் தனுஷ் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் ‘மாரி 2″. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அசுரன்’. தனுஷ் அவர்களின் மாற்றுப்பட்ட தோற்றத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார்.
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக இந்த படத்தில் மஞ்சு வாரியார் நடிக்கிறார். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சி திலீப் சுப்புராயன் மற்றும் கலை இயக்கம் ஜாக்கியும் கையாளுகின்றனர்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.


























