ஹிருத்திக் ரோஷனின் தாத்தா ஜே ஓம் பிரகாஷ் காலமானார்!!
சுஷ்மா ஸ்வராஜின் மறைவு குறித்த செய்தியிலிருந்து ஒட்டுமொத்த தேசமும் மீண்டு வருவதற்குள், பாலிவுட் இன்று காலை இன்னொரு செய்தியை தந்துள்ளது. பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஹிருத்திக் ரோஷனின் தாத்தா ஜே ஓம் பிரகாஷ் மும்பையில் புதன்கிழமை காலை இயற்கை எய்தினார்.
நடிகர் தீபக் பராஷர் தனது டுவிட்டரில் இது குறித்து அவர் எழுதியது, ‘மிஸ்டர் ஜே ஓம் பிரகாஷ்’ சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு காலமானார், அவர் தனது நண்பரான என் மாமாஜி “மிஸ்டர் மோகன் குமார்” உடன் சொர்க்கத்தில் சேர்கிறார், இவரின் இழப்பு மிகவும் வருத்தமாக இருக்கிறது! இந்திய சினிமாவுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகள் அதிகம் அது அவர்கள் எங்களுக்கு விட்டுச் சென்ற பரிசு! சில மாதங்களுக்கு முன்பு அவரைப் பார்க்கச் சென்றபோது எடுத்த பாம் இது! ஓம் சாந்தி! ’
செய்தி பரவிய உடனேயே, அமிதாப் பச்சன் தனது இரங்கலைத் தெரிவிக்க தனது இணையத்தில் அவர், ‘தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஜே ஓம் பிரகாஷ் ஜி , இன்று காலை காலமானார் .. அவர் மிகவும் அன்பானவர் .. என் பக்கத்து வீட்டுக்காரர், ரித்திக்கின் தாத்தா .. இறந்தது மிகவும் சோகமான ஒரு விஷயம்!! அவரது ஆத்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள் .. 🙏 ‘ என அவர் பதிவிட்டிருந்தார்.