நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’ இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் , ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்களும் பின்னணி ஸ்கோரையும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கோயம்பேடு ரோகிணி தியேட்டரின் அதிகாலை திரையிட பட்ட படத்திற்கு யுவனும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் வந்திருந்தனர்.
பார்வையாளர்கள் குழுவினரைக் கண்டபோது, தியேட்டர் முழுவதும் ‘யுவன், யுவன்’ என்ற தங்களின் அன்பை வெளிப்படுத்தினர், அதே நேரத்தில் நடிகர் அவர்களை நோக்கி காய் அசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெரும் கூட்டத்தினருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார், மேலும் ரசிகர்களிடமிருந்து ஒரு வரவேற்பைப் பெற்றார்.
2016 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான பிங்கின் ரீமேக் தான் ‘நேர்கொண்ட பார்வை’. எச். வினோத் இயக்கிய இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், கோகுல் சந்திரன் எடிட்டிங்கும் செய்துள்ளனர்.இந்த படத்தை பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி. போனி கபூர் தயாரித்துள்ளார்.