V4UMEDIA
HomeNewsKollywoodபாஃப்டா திரைப்பட கல்லூரி வழங்கும் பயிற்சி பட்டறை!!

பாஃப்டா திரைப்பட கல்லூரி வழங்கும் பயிற்சி பட்டறை!!

பாஃப்டா திரைப்பட கல்லூரி வழங்கும் பயிற்சி பட்டறை!!



சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு பயிற்சி தரும் வகையில் பல பயிற்சி பட்டறைகள் சினிமாவில் உள்ள பல துறைகளுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாஃப்டா திரைப்பட கல்லூரி திரைப்பட தயாரிப்பு, விநியோகம், வியாபாரம் மற்றும் விளம்பரம் பற்றிய பயிற்சி பட்டறை ஒன்றை வழங்குகிறது.

திரைப்பட துறையில் பல மொழிகளில் திரைப்படம் தயாரித்தவர்கள் நாடும் இந்த பயிற்சி பட்டறையில் சத்யஜோதி T.G. தியாகராஜன், J. சதிஷ் குமார், C.V. குமார், T. சிவா, கோ. தனவிஜயன் மற்றும் வெங்கட் சுபா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த பயிற்சி பட்டறையில் 

  • தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை – ஓர் அலசல் 
  • தயாரிப்பாளருக்கு உள்ள வாய்ப்புகளும் சவால்களும்
  • சரியான கதையைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்
  • நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு 
  • சரியான பட்ஜெட் வரையறுத்தல் 
  • சினிமா வியாபார உத்திகள்: திரையரங்கு உரிமைகள் மற்றும் மீத உரிமைகளை வியாபாரம் செய்யும் உத்திகள்
  • குறைந்த செலவில் அதிக விளம்பரம் பெற ஆலோசனைகள்
  • கவனத்துக்குரிய நிதி நிர்வாக முறைகள்
  • வியாபாரத்தில் சாத்தியமுள்ள சிறந்த முறைகள்
  • திரைப்பட விழா மற்றும் தேசிய விருதுக்கு அங்கீகாரம் பெரும் வழிமுறைகள் 
  • வெற்றி பெட்ரா சிறு பட்ஜெட் படங்களின் மூலம் படிப்பினைகள் 
  • டைட்டில் தேர்வு, அதிவு, சென்சார் விதிமுறைகள் உட்பட அனைத்தும் விளக்கப்படும்.  

ஆகஸ்ட் 15,16 மற்றும் 17 மூன்று நாட்கள் இந்த பயிற்சி பட்டறை நடைபெறும், இந்த பயிற்சி பட்டறையில் பங்கு பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

Most Popular

Recent Comments