V4UMEDIA
HomeReviewUnarvu Review

Unarvu Review

Review By :- V4umedia

Release Date :- 19/07/2019

Movie Run Time :- 2.45 Hrs

Censor certificate :- U

Production :- Amrutha Film Center

Director :- subu

Music Director :- Nakhul

Cast :- Suman, Aroul Shankar, Shinav, Ankitha, Kanthasamy

சுபு ஒரு சமூக சேவகராக இருக்கிறான் இவர் செய்யும் வேலைகளை வீடியோவாக
எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இவருக்கு விளம்பரம் தேடுகிறார் நாயகி
நவ்யா. சுப்பு உடனே இருக்கிறார் நாயகன் ஷின்வா. இவர் கொடுக்கும்
அறிவுரைகளின்படி செயல்படுகிறார் சுபு. இவருடைய பகுதியில் எம்.எல்.ஏ.வாக
இருக்கிறான் அருள் ஷங்கர். இவர் பணத்துக்காக எந்த ஒரு வேலையையும்
முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறார். 

உணர்வு

இவரது அப்பா தான் கட்சியை ஆரம்பித்ததால், அந்த கட்சியின் முதல்வராக இருக்கும் சுமனை மிரட்டி காரியங்களை சாதித்துக் கொள்கிறான் அருள். இம்மாதிரியான சூழலில் சமூக சேவகரான சுபு பிச்சைக்காரர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு  வேலை தந்து அவர்கள் நிலையை மாற்றுகிறார். 

உணர்வு

சுபு மீது மிகுந்த பாசம் கொள்கிறார் ஒரு பிச்சைக்காரர். சுபு என்ன சொன்னாலும் செய்யலாம் என்ற உணர்வு பிச்சைக்காரருக்கு உருவாகிறது. அப்படியாப்பட்ட ஒரு  உணர்வை அவர்களிடம் உருவாக்கி, அதனால் இவர் ஒரு காரியத்தை சாதிக்க
முயல்கிறார். அது என்ன காரியம்? அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை. 
மனிதர்களின் உணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல் என்கிற புதிய யுக்தியை கையாண்டு
இருக்கிறார் இயக்குநர் சுபு. அதற்கு பாராட்டுகள். ஆனால் திரைக்கதையாக சரியாக கையாள முடியாமல் திணறியிருக்கிறார். நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் என்பதால் அனுபவமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

உணர்வு

முதல்வராக வரும் அனுபவ நடிகர் சுமன் முதல்வருக்கு தேவையான குணாதிசையங்களுடன் அசத்தி
இருக்கிறார். சமூக சேவகராக இயக்குனர் சுபு நடித்துள்ளார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் திரைக்கதை நீளமாக இருப்பது போன்றூ எண்ணத்தோன்றுகிறது. புதுமையான கதையம்சம் . பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. 

Most Popular

Recent Comments

Review By :- V4umedia Release Date :- 19/07/2019 Movie Run Time :- 2.45 Hrs Censor certificate :- U Production :- Amrutha Film Center Director :- subu Music Director :- Nakhul Cast :- Suman, Aroul Shankar, Shinav, Ankitha, Kanthasamy சுபு ஒரு சமூக சேவகராக இருக்கிறான் இவர் செய்யும்...Unarvu Review