V4UMEDIA
HomeReviewKolanji Review

Kolanji Review

Review By :- V4uMedia Team

Release Date :- 26/07/2019

Movie Run Time :- 2.41 Hrs

Censor certificate :- U

Production :- White Shadows Productions

Director :- Dhanaram Saravanan

Music Director :- Natarajan Sankaran

Cast :- Samuthirakani, Sanghavi, Rajaji, Naina Sarwar, A. Govindamoorthy, Kirubakaran, Nasath, Rajin, Rujil Krishna, Nadodigal’ Gopal, Rekha Suresh,Aadhira

ஒயிட் ஷாடோஸ் புரடக்சன் சார்பில் இயக்குனர் நவீன் தயாரிக்க , சமுத்திரக்கனி, சங்கவி, கிருபாகரன், நாசத் ,ராஜாஜி, நெய்னா சர்வார், ரஜினி, பிச்சைக்காரன் மூர்த்தி நடிக்க, தனராம் சரவணன் எழுதி இயக்கி இருக்கும் படம்
கொளஞ்சி. பெரியாரின் வழி நடக்கும் அப்பாசாமியின் ( சமுத்திரக் கனி) மூத்த மகன் கொளஞ்சி (கிருபாகரன்) , பள்ளியில் ஒழுங்காகப் படிக்காமல் ஒழிசலாக  தவறான எண்ணங்கள் கொண்ட  சிறுவனாக வளர்கிறான் . அதே நேரம் நட்புக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறான் . அவனது நண்பன் அடிவாங்கி ( நாசத்) அப்பாசாமியின் அண்ணன் மகளுக்கும் ( நைனா சர்வார்) அப்பாசாமியின் மனைவியின் (சங்கவி) அண்ணன் மகனுக்கும் (ராஜாஜி) காதல் . அந்த காதலுக்கு  கொளஞ்சி உதவுகிறான் . 

நாத்திகம் பேசும் அப்பாசாமிக்கும் சாதி ஆணவம் பேசும் வேலப்பனுக்கும் ( மூர்த்தி)  பகை.

ஒரு நிலையில் பரிட்சையில் பெயில் ஆகும் கொளஞ்சி அதில் இருந்து தப்பிக்க, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வரும் சண்டையை பெரிது படுத்தி அவர்கள் பிரியவேகாரணம் ஆகிறான் .  

அக்கா-  மாமாவின் காதலுக்கு உதவினால் அவர்கள் கல்யாண சமயத்தில் அப்பா அம்மா சேர்ந்து விடுவார்கள் என்று எண்ணி அந்தக் காதலையும் கலைத்து விடுகிறான் .

இந்த நிலையில் அப்பாசாமிக்கும் வேலப்பனுகும் உள்ள பகை ஒரு நிலையில் முட்டிக் கொள்ள அப்புறம் என்ன ஆனது என்பதே கொளஞ்சி . வசமான கிராமத்துக் கதை. குடும்ப உறவுகள் பற்றிய கதை . படத்தின் சிறப்புகள் இவை . தனது சமூக அக்கறைக் கருத்துகளால் உறவுகள் மட்டும் ஊராரால் வித்தியாசமாகப் பார்க்கப்படும் நாயகன்  , மிக சிறப்பான கதாபாத்திரம் .
அருமை  

பெரியார் தொண்டர் கேரக்டரில் சமுத்திரக்கனி ஈர்க்கிறார் 

பள்ளி செல்லும் மகன் பற்றிய கதை என்பது பாராட்டுக்குரியது .

கொளஞ்சி கிருபாகரன், அடிவாங்கி நசத் ஆகியோரின் நடிப்பு சிறப்பு . நசத்அங்காங்கே சிரிக்க வைக்கிறார். வில்லனாக பிச்சைக்காரன் மூர்த்தி பாராட்டும்படி நடித்திருக்கிறார்.  தமிழன் பெருமை சொல்லும் பாடலுக்கு பாராட்டுகள். ஆனால் இரவிலும் குடை பிடித்துக் கொண்டு  திரியும் ஒரு கதாநாயகன் ( சென்ட்ராயன்) அந்தப் பாடலை பாடுகிறார் என்பதில் ஏதோ ஒரு வஞ்சக  உள்குத்து !ஒரு ஸ்கூல் பையன் நினைத்தால் கெடுத்து விடுமளவுக்கு தம்பதியும் காதல் ஜோடியும் இருக்கிறது . அதுவும் அந்த காதலி , காதலனைப் பற்றி யார் என்ன சொன்னாலும்  கபால் கபால் என நம்புகிறார் .  

எனினும் மூட நம்பிக்கை , சாதி ஆணவம் இவற்றுக்கு எதிராக பேசும் படம் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவன் இந்த கொளஞ்சி 

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 26/07/2019 Movie Run Time :- 2.41 Hrs Censor certificate :- U Production :- White Shadows Productions Director :- Dhanaram Saravanan Music Director :- Natarajan Sankaran Cast :- Samuthirakani, Sanghavi, Rajaji, Naina Sarwar, A. Govindamoorthy, Kirubakaran, Nasath,...Kolanji Review