V4UMEDIA
HomeReviewJackpot - Review

Jackpot – Review

Review By :- V4umedia

Release Date :- 02/08/2019

Movie Run Time :- 2.22 Hrs

Censor certificate :- U

Production :- 2D Entertainment

Director :- Kalyaan

Music Director :- vishal Chandrasekar

Cast :- Jyothika, Revathi, Yogi Babu, Samuthirakani, Anandaraj, Motta Rajendran,Mansoor Ali Khan , Sachu, Manobala, Mime Gopi , Devadarshini, Jagan, Imman Annachi , Anthony Daasan , Suzane George, Ashvin Raja, Samuthirakani

ஜாக்பாட் விமர்சனம் !

நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில், ஜோதிகா மற்றும் ரேவதி இணைந்து நடிக்கும் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படம் ‘ஜாக்பாட்’. இந்த படத்தில் திருட்டு தொழில் செய்து பிழைக்கும் கதாபாத்திரத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி நடிக்கின்றனர்.

இருமடங்காக பெருகும் அட்சய பாத்திரத்தை அடைய விரும்பி அவர்கள் செய்யும் காரியங்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் ஒரு ஹீரோவிற்கு நிகராக அதிரடி, ஆக்ஷன், டான்ஸ், காமெடி என அனைத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார் ஜோதிகா. இவருடன் ரேவதி அவர்களின் காம்பினேஷன் கலக்கல்.

ஆண், பெண் என இரட்டை வேடங்களில் வெவ்வேறு உடல் மொழி, டயலாக் டெலிவரி என வித்தியாசம் காண்பித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் இடம் பெரும் காட்சிகளில் அரங்கம் சிரிப்பலைகளால் நிரப்புவது நிச்சயம்.

யோகி பாபு, மொட்டை ராஜேந்தர், மன்சூர் அலிகான், மனோபாலா , ஜெகன் உள்ளிட்டோர் படத்தில் தங்களின் பங்கை திறம்பட செய்திருக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் காமெடி படத்துக்கு தேவைப்படும் பின்னணி இசையை வழங்கி படத்தை மெருகூற்றுகிறார். ஆர்.எஸ்.ஆனந்தகுமார் படத்தில் இடம் பெரும் காட்சிகளில் திறம்பட ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

அட்சய பாத்திரத்தை அடைய துடிக்கும் போராட்டம் என கடையை மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் கல்யாண். குலேபகாவலி படம் போலவே இந்த படத்திலும் நகைச்சுவையை மையப்படுத்தி ரேவதி, ஜோதிகா, மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். ரேவதி மற்றும் ஜோதிகா எதற்காக திருட்டு தொழிலில் ஈடுபட்டனர் என்பதை கூறும் பிளாஷ் பேக் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4umedia Release Date :- 02/08/2019 Movie Run Time :- 2.22 Hrs Censor certificate :- U Production :- 2D Entertainment Director :- Kalyaan Music Director :- vishal Chandrasekar Cast :- Jyothika, Revathi, Yogi Babu, Samuthirakani, Anandaraj, Motta Rajendran,Mansoor Ali Khan , Sachu,...Jackpot - Review