V4UMEDIA
HomeReviewChennai Palani mars review

Chennai Palani mars review

Review By :- V4umedia

Release Date :- 26/07/2019

Movie Run Time :- 2.38 Hrs

Censor certificate :- U

Production :- Vijay Sethupathi Productions

Director :- Biju Vishwanath

Music Director :- –

Cast :- Praveen Raja, Rajesh Giriprasad, Rajkumar, A.Ravikumar

விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் புரடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மற்றும் பிஜு இருவரும் எழுத, பிஜுவின்  இயக்கத்தில் பிரவீன் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த மாரிமுத்து , இயக்குனர் பிஜு மற்றும் பலர் நடித்து வந்திருக்கும் படம் சென்னை பழனி மார்ஸ்.மனதின் சக்தியை பலப்படுத்தி ஒன்று கூட்டுவதன் மூலம் செவ்வாய் கிரகத்துக்குப் போக முயலும் அப்பாவையும் அவரது இருபது வருட முயற்சியின் தோல்வியையும் பார்த்த பின்னரும் அதே முயற்சியில் இறங்குகிறான் மகன். செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் அதிகம் படுகிற பழனி மலையில் நின்று , பூமிக்கு நெருக்கமாக செவ்வாய் வருகிற ஒரு குறிப்பிட்ட நாளில் முயன்றால் செவ்வாய் கிரகத்துக்கு போய் விடலாம் என்பது அப்பா மற்றும் அவனது முடிவு.

தவிர அவனுக்கு போதை பவுடர் பயன்படுத்தும் பழக்கமும் உண்டு . இதனால் ஆனந்த் என்ற நபரின் கொலை விவகாரத்தில் அவனை போலீஸ் கைது செய்கிறது. கைது செய்த இன்ஸ்பெக்டருக்கும் அவரோடு பணி செய்யும் உதவி போலீஸ்அதிகாரியின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு 

போதை விஞ்ஞானி சக போதை நண்பனோடு போலீசிடம் இருந்து தப்பித்து,  செவ்வாய் கிரகம் போய்ச் சேருவதற்காக பழனிக்கு கிளம்புகிறான் .  இடையில் போதைப் பொருள் கடத்தும் ஒரு கும்பல்,  ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து திடீரென வேலை நீக்கம் செய்யப் பட்டதால் தற்கொலைக்கு முயலும் ஒரு
நபர், ஆகியோரை இவர்கள் எதிர்கொள்கிறார்கள் . போலீசும் துரத்துகிறது . விஞ்ஞானி செவ்வாய் கிரகம் போனானா இல்லையா என்பதே இந்தப் படம் . பெண்களே இல்லாத படம் .

வித்தியாசமான கதை முயன்றதற்காக பிஜுவை மனமாரப் பாராட்டலாம் . ஆரம்பக் காட்சிகள் சிறப்பு . ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஓவர் ஆக்டிங், அசந்தர்ப்ப சிரிப்புகள், காட்டுக் கூச்சல் , செயற்கையான நாடகத்தனமான படமாக்கல் என்று மண்டை காய வைக்கிறார்கள் . சரி அவர்கள்தான் அப்படி என்றால் போதைப் பொருள் பயன்படுத்தாத கேரக்டர்களும் அப்படியே ஓவராக பேசுகிறார்கள் . சிரித்தால் சிரித்துக்
கொண்டே இருக்கிறார்கள் . நீள நீளத்துக்கு காட்சிகள் நீள்கின்றன . திரைக்கதையும் போதையில் தறிகெட்டு தள்ளாடுகிறது. கிளைமாக்ஸ் நெகிழ்ந்து கனக்க வைக்கிறது . போதை மருந்து,  எக்சென்ட்ரிக் எச்சில்கள் , இவற்றை எல்லாம் தூக்கி விட்டு சீரியசாகவே ஒரு லோக்கல் விஞ்ஞானி அவனது செவ்வாய்  பயண முயற்சிகள் , உள்ளூர் கேலி கிண்டல்கள்,

அவனது  யதார்த்த வாழ்க்கை பிரச்னைகள் அவனுக்கு ஆதரவு இல்லாத நிலை என்று சின்சியராக திரைக்கதை அமைத்து நாடகத்தனம் இல்லாமல் படத்தை உருவாக்கி இதே கிளைமாக்ஸ் கொடுத்து இருந்தால் படம் வெற்றி கிரகத்துக்கு போயிருக்கும்

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4umedia Release Date :- 26/07/2019 Movie Run Time :- 2.38 Hrs Censor certificate :- U Production :- Vijay Sethupathi Productions Director :- Biju Vishwanath Music Director :- - Cast :- Praveen Raja, Rajesh Giriprasad, Rajkumar, A.Ravikumar விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் மற்றும் ஆரஞ்சு மிட்டாய்...Chennai Palani mars review