Review By :- V4umedia
Release Date :- 12/07/2019
Movie Run Time :- 2.35 Hrs
Censor certificate :- U/A
Production :- Rise East Entertainments
Director :- Chandru
Music Director :- KP
Cast :- Dheeraj, Dushara, Meera Mitun, Pradaini Surva, Ajay , Radha Ravi , ‘Mime’ Gopi , Charle , Surekha Vani, Roshan,
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்
திருமணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை.
விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது.
தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் என்று. நாயகனின் ஆசையும், அவனைத் தனியே விட்டே ஓடும் அவனது நண்பர்களின் முன் ஜாக்கிரதை இல்லாத தன்மையும், சில மணி நேரங்களில் நாயகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
காவல்துறை உயரதிகாரியாக, தெலுங்கு நடிகர் அஜய் நடித்துள்ளார். வில்லன் பாத்திரத்தில் வரும் அஜயும், சார்லியும் தான் தங்கள் அனுபவத்தால் அவர்கள் வரும் காட்சிகள் சிறப்பு .
நாயகன் கார்த்திக்காக, இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் தீரஜ் நடித்துள்ளார். இரண்டாம் பாதிக்குப் பின்னான திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் கதையோடு ஐக்கியமாகிவிட்டாலும், படத்தின் முதற்பாகம் முழுவதும், அமெரிக்க மாப்பிள்ளை அளவுக்கே இருந்தது அஅஜய், சார்லி, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரோஷன் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்தை இழுத்துப் பிடிக்கின்றனர்.
ஹாலிவுட் சினிமாவின் ஒரு காட்சியைப் பார்த்து, சென்னையில் ‘ட்ரக் (Drug)’ கிடைக்கிறது என்பதை நிரூபித்தே ஆகவேண்டுமென ரோஷன் நினைக்கிறார். அந்த ‘டிரக்’ எப்படி வேலை செய்யும் என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப காட்சிகள் சுவாரசியமாக உள்ளன. படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது .
மொத்தத்தில் ஒருமுறை சென்று பார்க்கலாம் .