V4UMEDIA
HomeNewsKollywoodபிரபாஸின் 'சாஹோ'வில் அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக்!!

பிரபாஸின் ‘சாஹோ’வில் அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக்!!



பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சுஜீத் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சாஹோ’. இந்த பல மொழி அதிரடி திரில்லரில் நடிகர்கள் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், சங்கி பாண்டே மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Arun Vijay's look in Prabhas and Shraddha Kapoor's Saaho

மதி ஒளிப்பதிவும் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கும் கையாளுகின்றனர். இந்த படத்தை யூ .வி கிரியேஷன்ஸ் என்ற வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி படம் வெளிவருவதற்கு முன்னதாக, படத்திலிருந்து ஒரு அற்புதமான போஸ்டர் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த ஒன்று, ஆனால் அவரது தோற்றமும் பெயரும் இதற்குமுன் வெளியிடப்படவில்லை. இப்பொழுது நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்திலிருந்து தனது கதாபாத்திரத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அவர் அதில், “சாஹோவிலிருந்து விஸ்வாங்க்கின் தோற்றம் இது.. நான் நடிப்பதை நேசித்ததுப் போலவே நீங்கள் இந்த கதாபாத்திரத்தையும் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன் !!” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/B00LkXhho0q/?utm_source=ig_web_copy_link​

Previous article
Next article

Most Popular

Recent Comments