V4UMEDIA
HomeNewsKollywoodபிக் பாஸ் 3: ரேஷ்மாவை தொடர்ந்து சரவணன் தற்போது எலிமினேட் ஆகியிருக்கிறார்!! 

பிக் பாஸ் 3: ரேஷ்மாவை தொடர்ந்து சரவணன் தற்போது எலிமினேட் ஆகியிருக்கிறார்!! 

Image result for After Reshma, Saravanan gets eliminated in Bigg Boss 3!!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். 2017 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது சீசன் 3ல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரேஷ்மாவுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5 பிக் பாஸ் 3 எபிசோடில் சரவணன் வெளியேறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய நாடகங்களை வெளியிட்டது, அதற்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. நிகழ்ச்சியின் சோகமான தருணங்களில் ஒன்று எவிக்ஷன்.

இந்த சீசனில் ஏற்கனவே பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மற்றும் மீரா மிதுன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 4 எபிசோடில் நிகழ்ச்சியின் 5 வதாக எலிமினேஷன் ஆனவர் ரேஷ்மா.

ஆகஸ்ட் 5 ஆன நேற்றைய எபிசோடில், சரவணன் தனது கல்லூரி நாட்களில் பேருந்துகளில் பெண்களிடம் தவறாக நடந்ததை ஒப்புக்கொண்டதால் அவர் சென்ற வாரம் மன்னிப்பு கேட்டிருந்தார், இருப்பினும் இவர் இயக்குனர் சேரனுடன் நடந்த நிகழ்விற்கு மன்னிப்பு கோரினார்.

ஒரு தேசிய ஊடகத்தில் இதுபற்றி பேசப்பட்டது மற்றும் அவரது அறிக்கையால் ஏராளமான பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சரவணனை நீக்குவதற்கான இந்த முடிவு அந்த நாளுக்கு பதிலாக இப்போது எடுக்கப்பட்டாலும், பிக் பாஸ் சமூகம் அவரது செயலை கண்டித்து இந்த முடிவை கொண்டு வந்துள்ளது.

Most Popular

Recent Comments