தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் இயக்குனர் அட்லீ எழுதி இயக்கியுள்ள படம் ‘பிகில்’. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்துஜா, ஜாக்கி ஷிராஃப், கதிர், விவேக், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இந்த படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

‘பிகில்’ படப்பிடிப்பு சென்னையின் ரெட்ஹில்ஸ் பகுதியில் நடந்து வருகிறது, இந்த படப்பிடிப்பின் ஒரு பகுதியாக தளபதி விஜய் அவர்கள் பைக் ரைட் வரும் காட்சி படமாக்கப்பட்டது. தளபதி அவர்கள் படபிடிப்பு முடிந்து ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். இந்தப் படபிடிப்பின் போது ரசிகர்கள் தளபதி விஜய் அவர்களை பார்த்ததில் உற்சாகமடைந்தனர்.