பன்முக நடிகரான விஜய் சேதுபதி கடைசியாக திரையில் எஸ்.யு.அருண்குமாரின் ‘சிந்துபாத்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலியும் இவரின் மகன் சூர்யா சேதுபதியும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
இவரது அடுத்தப் படமான ‘சங்கத்தமிழன்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ புகழ் இயக்குனர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நிவேதா பேத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா எஎன இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் அசுதோஷ் ராணா, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக் – மெர்வின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதாநாயகியான ராஷி கண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில், “என்னக்கு பிடித்த விஜய் சேதுபதி அவர்களுடன் நடித்தது மிகவும் சந்தோஷமான ஒரு நிகழ்வு” என்று அவர் பதிவிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.