நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக ‘சிந்துபாத்’ படத்தில் அஞ்சலி மற்றும் இவரது மகன் சூர்யா சேதுபதியுடன் நடித்திருந்தார். அவர் வரவிருக்கும் படங்களில் ஒன்று டெல்லி பிரசாத் தீனதயலன் இயக்கும் ‘துக்ளக் தர்பார்’. விஜய் சேதுபதியின் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்போது, இந்த படத்திலிருந்து இன்னும் சுவாரஸ்யமான அதிகாரப்பூர்வ அப்டேட் வந்துள்ளது, மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் மற்றொரு படைப்பான மல்டி ஸ்டாரர் படம் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது தனது படவரிசையில் மாமானிதன், சங்க தமிழன், கடைசி விவாசாயி, முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று ‘800’ மற்றும் பல படங்களில் பிஸியாக உள்ளார். அவர் சமீபத்தில் மலையாளத்தில், ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘மார்கோனி மத்தாய்’ படத்தில் நீடித்த கேமியோவில் அறிமுகமானார்.