HomeNewsKollywoodசூப்பர்ஸ்டாரை பிரம்மாண்டமாக வரவேற்ற மும்பை கல்லூரி!!

சூப்பர்ஸ்டாரை பிரம்மாண்டமாக வரவேற்ற மும்பை கல்லூரி!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார். சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா ‘சந்திரமுகி’ படத்தில் முதலில் இணைந்து நடித்தார், அதன் பின் ‘குசேலன்’ படத்திலும் ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலிலும் இணைந்து நடித்திருந்தார். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார், பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Image result for Rajinikanth gets a thundering welcome in Mumbai College!!

அண்மையில் சூப்பர்ஸ்டார் மும்பையில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்வில் பங்கேற்றார். இவரின் வருகை என்பது எப்போதும் மக்களால் திருவிழாவாக கொண்டாடப்படும். அந்த வகையில் இவர் பங்கேற்ற இந்த கல்லூரி நிகழ்ச்சியிலும் இது போன்ற ஒரு பெரும் வரவேற்பை, நிகழ்ச்சியில் கலந்த மக்களும் அந்த கல்லூரி நிர்வாகமும் இவருக்கு கொடுத்தனர்.

சூப்பர்ஸ்டார் அவர்கள் கல்லூரி வளாகத்திலிருந்து நடந்து வரும் முதலே அவருக்கு ரசிகர்கள் கரகோஷமிட்டும் மேலும் அவர் நடந்து வரும் போதும் ‘லுங்கி டான்ஸ்- ஆல் தி ரஜினி ஃபேன்ஸ் ‘ பாடல் கொண்டும் வரவேற்றனர். சூப்பர்ஸ்டார் அவர்களின் ரசிகர் ஒருவர் இவரின் இந்த வரவேற்பு விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments