இயக்குனர் சன்னி தியோல் அவரது மகன் கரண் தியோல் வைத்து புது படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘பால் பால் தில் கே பாஸ்’ என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் மூலம் கரண் தியோல் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சன்னி தியோல் சமீபத்தில் அளித்த பேட்டியில் “நான் முந்தைய படங்களை புகழ்ந்து பேசவோ அல்லது இன்று தயாரிக்கப்பட்ட படங்களை விமர்சிக்கவோ இல்லை. நான் சொல்வது எல்லாம் திரைப்படங்களை துரித உணவாக மாற்ற வேண்டாம். எல்லோரும் ஒரு வெற்றியை விரும்புகிறார்கள், ஆனால் அதை நோக்கி நனவுடன் செயல்பட வேண்டாம். சில நேரங்களில், அழுத்தம் காரணமாக நான் கூட திரைப்படங்களைச் செய்திருக்கலாம், ஆனால் பெரும்பாலும், நடைமுறையில் உள்ளதைத் தொடர்ந்து ஓடுவதை விட, நான் நம்பும் படங்களை நான் செய்து வருகிறேன். ”
மேலும் இவர் தனது மகன் அதிரடி காட்சிகளை நிகழ்த்துவதை அவர் எப்படி உணருகிறார் என்பதைப் பகிர்ந்துகொண்டு, “எங்கள் தலைமுறையில் தொடங்கப்பட்ட முதல் நபர் நான், இந்த படம் என் அப்பா (தர்மேந்திரா) பீட்டாபின் போது எப்படி என்னை குறித்து பயந்திருப்பார் என்பதை எனக்கு உணர்த்தியது. நீங்களே ஒரு தந்தையாக மாறாவிட்டால், இந்த வலி, பயம் மற்றும் அன்பைப் புரிந்துகொள்ள முடியாது. ”
சண்டை காட்சியைப் படமாக்க 400 அடி உயரத்தில் நடக்கும் பொது ஒரு தந்தையாக அவர் மிகவும் பயந்ததாகவும். கரண் தியோல் இந்த சண்டை காட்சியை திறம்பட செய்வார் என அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
ஒரு புதுமுகத்திற்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி பேசுகையில், சன்னி தியோல், அறிமுகமாகும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஒரு பரிந்துரை தேவைப்படுகிறது. மேலும் அவர் இந்த துறையில் இருப்பதால் அவருடைய மகனிற்கு அறிமுகம் செய்தாலும் இனி வரும் காலங்களில் கரண் தியோல் நடிக்கும் படங்கள் மட்டுமே அவருக்கு கைகொடுக்கும் என்று சன்னி தியோல் கூறுகிறார்.