V4UMEDIA
HomeNewsBollywood2019ல் திருமணம் செய்து கொள்வார்களா சுஷ்மிதா சென் மற்றும் காதலன் ரோஹ்மன் ஷால்?

2019ல் திருமணம் செய்து கொள்வார்களா சுஷ்மிதா சென் மற்றும் காதலன் ரோஹ்மன் ஷால்?

Image result for Sushmita Sen and Rohman Shawl will tie the knot this year?

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் மற்றும் அவரது காதலன் ரோஹ்மான் ஷால் ஆகியோர் பாலிவுட் இண்டஸ்ட்ரியில் மிகவும் விரும்பப்படும் ஜோடி. சில நாட்களாக இவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக தெரிய வருவதால். இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளவார்கள் என்ற கேள்வி திரை வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

திருமணத்தின் யோசனை குறித்து காதலர்கள் கலந்துரையாடி வருவதாக தெரிய வருகிறது. திட்டமிட்டபடி நடந்தால், அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ரோஹ்மான் தனது காதலை வெளிபடுத்தியபோது சுஷ்மிதா அதற்கு ஒத்துக்கொண்டதாகவும், அதனால்தான் இந்த ஜோடி தங்களது உறவை பகிரங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது திருமணத்திற்கு ஒரு நல்ல நேரத்தை பார்த்து வருகின்றனர்.

Image result for Sushmita Sen and Rohman Shawl will tie the knot this year?

சுஷ்மிதாவின் மகள்கள் ரெனீ மற்றும் அலிசா ஆகியோர் ரோஹ்மானிடம் மிகவும் அன்பாக இருப்பதால். சுஷ்மிதா தனது மகள்கள் தனது விருப்பத்திற்கு ஒப்புதல் அளித்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Most Popular

Recent Comments