HomeNewsKollywood"விஜய் அண்ணாவின் அரவணைப்பு..." கதிர் பதிவிட்ட டுவீட்!!

“விஜய் அண்ணாவின் அரவணைப்பு…” கதிர் பதிவிட்ட டுவீட்!!



தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் அட்லீ எழுதி இயக்கி வரவிருக்கும் படம் ‘பிகில்’. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா மற்றும் பலர் முக்கிய துணை வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Image result for kathir in bigil

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘பரியேறும் பெருமாள்’ புகழ் நடிகர் கதிர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான தனது படப்பிடிப்பை முடித்த அவர், அது தொடர்பான இதய உணர்வு பதிவை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

Image

அதில் அவர், “இந்த புகைப்படம் என் இதயம் பேச விரும்புவதை பேசுகிறது !! பிகிலிற்க்கான படப்பிடிப்பு முடிந்தது! உங்கள் அரவணைப்பு எனக்கு ஒரு உணர்ச்சி மகிழ்ச்சியையும் எல்லையற்ற அன்பையும் கொடுத்தது விஜய் அண்ணா! அனைத்து சிறந்த தருணங்களுக்கும் நன்றி. இவை அனைத்தையும் உண்மையாக்கியதற்காக நன்றி அட்லீ அண்ணா மற்றும் ஜகதீஷ்” என அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments