HomeNewsKollywoodஜாக்பாட் படத்திற்கு இலவச டிக்கெட் பெற ஒரு வாய்ப்பு!!

ஜாக்பாட் படத்திற்கு இலவச டிக்கெட் பெற ஒரு வாய்ப்பு!!



ஜோதிகா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் ‘ஜாக்பாட்’. ‘குலேபாகவலி’ இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தில் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகி பாபு மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

Image

இந்த படத்தை இலவசமாக பார்க்க தற்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனிற்காக ஏற்கனவே #EnnodaJackpot கான்டெஸ்ட் ஒன்றை வெளியிட்டனர் தற்போது #JackpotPartner என்ற ஒரு கான்டஸ்ட் கொண்டு வந்துள்ளனர். இதில் நண்பர்களுடன் முகநூலில் எடுக்கப்படும் AR பில்டர் புகைப்படத்தை ட்விட்டரில் ஹாஷ்டேக்களில் பதிவிடும் வெற்றியாளருக்கு இந்த படத்தை காண இலவச டிக்கெட் கொடுக்கப்படும் என்று ஜாக்பாட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டைன்மெண்ட் அறிவித்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆர்.எஸ்.ஆனந்தகுமார் கையாளுகிறார் அதே வேளையில், ‘ஜில் ஜங் ஜக்’ இசை இயக்குனர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி பிலிம் பேக்டரியுடன் இணைந்து நடிகர் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments