HomeNewsKollywoodகுடும்பத்துடன் தாய்லாந்து சுற்றிப் பார்க்கும் சிம்பு !

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றிப் பார்க்கும் சிம்பு !



நடிகர் சிம்பு, ஹன்சிகாவுடன் இணைந்து மஹா படத்தை ஓரளவுக்கு முடித்து விட்டார். இதையடுத்து,கெளதம் கார்த்திக் உடன் இணைந்து தற்போது இன்னொரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. வெங்கட் பிரபு, வெப் சீரிஸ் இயக்க போய்விட்டார்.


இந்நிலையில் சிம்பு தன் அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா, தம்பி குறளரசன், அவர் மனைவி, தங்கை இலக்கியா அவரது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் குடும்பத்தோடு தாய்லாந்து நாட்டுக்குச் சென்றிருக்கிறார். தாய்லாந்து சென்றிருக்கும் சிம்பு, அங்கு பல பகுதிகளுக்கும் சென்று சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments