கே வி ஆனந்தி இயக்கி நடிகர் சூர்யா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘காப்பான்’. இந்த படத்தை முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரான மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, போமன் இரானி, சயீஷா ஆகியோர் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எம். எஸ். பிரபு ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகம் வெற்றியை தொடர்ந்து, பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்பை அதிகரிக்க செய்தது. சுஜித், இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை வம்சி மற்றும் ப்ரமோட் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர், இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி VFX தாமதத்தினால் ஆகஸ்ட் 30 என மாற்றப்பட்டுள்ளது. சாஹோ ஒரே நேரத்தில் 4 மொழிகளில் உருவாக்கப்படுகிறது – இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம்.
இவ்விரண்டு படங்களும் ஒரேய தேதியில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஆக்ஷன் திரில்லர் படம், சாஹோ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. பாகுபலிக்கு பின்னர் வெளியாகும் படம் இதுவென்பதால் பிரபாஸ் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சூர்யாவின் ‘காப்பான்’ படமும் ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு படம். அதிரடி வகைகளில் ‘காப்பான்’ மற்றும் ‘சாஹோ’ ஒரே நாளில் வெளியிடப்பட்டால், இரு படங்களுக்கான வணிகமும் தென்னிந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பிரிக்கப்படும். இருப்பினும் ‘காப்பான்’ படத்திற்கான வரவேற்பும் ‘சாஹோ’ படத்திற்கான வரவேற்பும் தென்னிந்தியாவில் சமமாக உள்ளது.