முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்திருக்கிறார். தளபதி விஜய் மற்றும் அட்லீ இணையும் மூன்றாவது படம் இது. முன்னணி நடிகரான விஜய் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது திரையுலக நடிகைகள் மற்றும் இணை நடிகர்களின் மிகப்பெரிய கனவாகும். எவ்வளவு உயரமாக சென்றாலும் எளிமையின் சிகரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் படத்தில் இணைந்து நடிக்க விரும்பும் நடிகைகளின் வரிசையில் ‘ரஷ்மிகா மந்தண்ணா’ இணைந்துள்ளார்.
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா. இவரின் சமீபத்திய படம் ‘டியர் காம்ரேட்’ இந்த படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இவர் ‘டியர் காம்ரேட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழில் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருப்பினும் தளபதி விஜய் அவர்களின் அடுத்த படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் ரஷ்மிகா மந்தண்ணா, “நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் கையெழுத்திட்டீர்களா? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இந்த வதந்திகள் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால், என்னால் காத்திருக்க முடியாது. எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், நானும் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன், “என்று அவர் சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில் கூறினார், மேலும் அவர் இரண்டு தமிழ் திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதை உறுதிப்படுத்தினார்.