முன்னணி நடிகரான தனுஷ் அவர்களின் பிறந்தநாள் ஜூலை 28 ஆன நேற்று இவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மேலும் இணையத்தில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இன்று நடிகர் தனுஷ் அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,
“எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
பெரும் அன்பையும் பாசத்தையும் நீங்கள் அனைவரும், என் பிறந்தநாள் ஆன நேற்று என்மீது காண்பித்தீர்கள்.
எனது ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் என்னை மிகவும் சிறப்பாக உணர வைத்ததற்கு, எல்லா அளவுகடந்த அன்பிலிருந்தும் நான் நிறைய ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்கிறன். நீங்கள் என்மீது தொடர்ந்து அன்பை செலுத்தி வருகிறீர்கள். என் வலிமையாக இருக்கும் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறன்.
மேலும் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக நண்பர்களுக்கும் நன்றி.”
என்று தனுஷ் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.