V4UMEDIA
HomeNewsBollywoodசல்யூட் நம் "சிங்கப்பெண்ணே" ஷாக்ஷி ஹரேந்திரன்!!

சல்யூட் நம் “சிங்கப்பெண்ணே” ஷாக்ஷி ஹரேந்திரன்!!



“தெய்வத்தான் ஆகா எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”

குறளுக்கேற்ப வாழ்வது கடினம் என கூறுபவர்கள் மத்தியில் அதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர் ஷாக்ஷி ஹரேந்திரன். இவர் முதன் முதலில் தன் தனி திறனை வெளிப்படுத்தியது சிங்கிங் ஸ்டார் என்ற இசை ரியாலிட்டி ஷோவில். இவரின் முதல் பாடலிலேயே அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த சந்தோஷ் நாராயணன், அனந்து மற்றும் சக்திஸ்ரீ கோப்லன் மூவரும் வியக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தினார்.



இவரின் தனித்துவமே ஆண் மற்றும் பெண் குரலில் பாடுவது மட்டுமின்றி பல்வேறு பாடகர்களின் குரலில் பாடி அசத்துவதும் தான். இசை மிமிகிரி செய்வதில் வல்லவர் இவர்.

மேடை பயத்தை போக்க போட்டியில் பங்குபெற்ற இவர், தனது விடாமுயற்சியால் இன்று திரையுலகில் கால் பதித்துள்ளார். இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த நிகழ்வு எனில், இவர் முதன் முதலில் ‘கோலியன் கி ராம்லீலா’ பாடலை தமிழில் மாற்றி எழுதி பாடிய தமிழ் பதிப்பு தான். இந்தி பாடல்களின் தமிழ் பதிப்பு நெட்டிசன்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இந்த பாடலுக்கு வரிகள் புனைந்தது இவருடைய பேனா என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.


ஷாக்ஷியின் திறமை போலவே இரண்டு குரலில் பாடும் ஸ்டான்லி வின்செட் இவருடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்தது இந்த தமிழாக்கம் பாடலுக்கு பிறகு தான். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய முதல் பாடல் ஜில்லா படத்தின் ‘கண்டாங்கி’ பாடல். இந்த பதிப்பு இணையத்தில் மிகவும் வைரலாகி உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றது. இதன் பின்னர் இவர்கள் இணைந்து பாடிய ‘உன்ன இப்போ பாக்கணும்’, ‘அடியே என்ன ராகம்’, ‘நானே வருவேன்’ மற்றும் உன்னிகிருஷ்ணன் மாஷ்-அப், இவை அனைத்தும் இவர்களது வெற்றிக்கு சூட்டப்பட்ட மாலைகள். இந்த இரட்டையருக்கு ‘ஸ்டாரி’ என்ற புனைபெயரும் உண்டு.



சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஷாக்ஷிக்கு சிங்கப்பூரை விட சென்னையே தாய்வீடு. தனக்கு இசை மற்றும் கலையில் நிறைய வாய்ப்பை ஏற்படுத்திய இந்த நகரமே தனக்கு விருப்பமான இடம் என்று ஷாக்ஷி கூறுகிறார். அவரது பாடும் திறமையை ஊக்குவித்த நகரம் இதுதான் (“விரைவில் ஒரு கிளாசிக்கல் ஆசிரியரின் கீழ் பயிற்சி பெறுவேன் என்று நம்புகிறேன்”). மேலும் ஒரு நடிகையாக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கிய நகரமும் இதுதான் என்றுரைத்தார்.



அவர் ஓரிரு குறும்படங்களில் நடித்திருக்கிறார், இன்று அவர் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அனிஸின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற தமிழ் படத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கனவு நனவாகுவதும் கனவாகவே மாறுவதும் மனிதன் எடுக்கும் முயற்சியும் அவனது தனி திறமையையும் பொறுத்தது. சிங்கப்பூரில் இருந்து கனவுகள் சுமந்து கொண்டு சென்னை வந்து களம் இறங்கி இன்று தமிழ் திரையுலகில் கால்பதித்த இந்த சிங்கபெண்ணிற்கு நம் சல்யூட்!!

Most Popular

Recent Comments