கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய சூப்பர்ஹிட் திரைப்படமான ‘பேட்ட’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நண்பராக நடித்தவர் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். இவர் ‘நா நா’, ‘ராஜவம்சம்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் ‘கென்னடி கிளப்’. பெண்களின் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சசிகுமாரின் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன, அவற்றில் முதலில் வெளியாகும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை இன்று வெளியாகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கிய, கென்னடி கிளப் ஒரு மகளிர் கபடி அணியைச் சுற்றியுள்ள ஒரு விளையாட்டு நாடகமாகும், மேலும் சசிகுமார் ஒரு கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இம்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூரி மற்றும் மீனாட்சி ஆகியோரும் நடிக்கின்றனர்.