இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார், மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் புதிதாக நடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இப்படத்திஇற்கு அனிருத் இசையமைக்கிறார், கமல்ஹாசன் மற்றும் ஷங்கருடன் முதல் முறையாக இவர் இணைந்து பணிபுரிகிறார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் எஸ்.ரவி வர்மன் மற்றும் ஏ.ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரால் கையாளப்படுகிறது.
இந்த அரசியல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது என்பது இப்போது இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான அப்டேட் வந்துள்ளது. பொதுவாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், இந்த படத்திற்கான நடிகர் நடிகை தேடல் குறித்து லைக்கா நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.