HomeNewsஅல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் ஜெயராம்!!

அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் ஜெயராம்!!

மலையாள படங்களில் முன்னணி நடிகராகவும் தென்னிந்திய திரையுலகின் பல்துறை நடிகர்களில் ஒருவரானவர் நடிகர் ஜெயராம். விஜய் சேதுபதியின் மோலிவுட் அறிமுகமாகும், இயக்குனர் சனில் கலாத்திலின் காதல் படமான ‘மார்கோனி மத்தாய்’ என்ற படத்தில் இவர் சமீபத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஜெயராம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்னாப்ஷாட்டை வெளியிட்டிருந்தார், அதில் இவரின் அடுத்த படமான AA19 க்கு தயாராவது போன்று அந்த புகைப்படம் அமைந்திருந்தது, இதில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பேத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் சமீபத்தில் நடிகை தபு நடிப்பதாக அறிவித்திருந்தனர், இதை தொடர்ந்து ஜெயராம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நவதீப், சுஷாந்த், சுனில் மற்றும் சத்யராஜ் நடிக்கின்றனர்.

Image

AA 19 ஐ திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கியுள்ளார், ஹாரிகா மற்றும் ஹாசின் படைப்புகளுடன் இணைந்து கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படம் சங்கராந்தி 2020ல் வெளிவர இருக்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments