V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய வாய்ப்பு- தர்பார் அப்டேட்!!

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய வாய்ப்பு- தர்பார் அப்டேட்!!



Image result for darbar update

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பிளாக்-பஸ்டர் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டது. தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பாரில் சூப்பர்ஸ்டார் நடித்து வருகிறார். போலீஸ் சார்ந்த அதிரடி படமாக அழைக்கப்படும் இந்த படத்தில் நயன்தாரா சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார். சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா ‘சந்திரமுகி’ படத்தில் முதலில் இணைந்து நடித்தார், அதன் பின் ‘குசேலன்’ படத்திலும் ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலிலும் இணைந்து நடித்திருந்தார்.

Image result for darbar update

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார், பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் சமீபத்திய உற்சாகமான அப்டேட் குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

Hi guys.. The HD photos of our very own Thalaivar & Title Design of #Darbar will be released 7:00PM today, get creative and do what you do the best #Darbarposterdesign, best design will be selected and released officially. #Darbar @rajinikanth @santoshsivan @LycaProductions— A.R.Murugadoss (@ARMurugadoss) July 25, 2019


‘தலைவர் படத்தில் முதல்முறையாக, இது போன்ற ஒரு வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. ரஜினியின் எச்டி(HD) படங்கள் இன்று (ஜூலை 25) மாலை 7 மணிக்கு வெளியிடப்பட உள்ளன, மேலும் இந்த படங்களை கொண்டு பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் ரசிகர்கள் செய்யப்படும் போஸ்டர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இந்த போஸ்டருக்கு மிக அதிக எதிர்பார்ப்பு உள்ளது, இது விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் திறமையும், தலைவரின் மீதுள்ள அன்பையும் காண்பிக்கும் விதமாக ஒவ்வொருவரும் அவர்கள் டிசைனிங் செய்த போஸ்டரை #DarbarPosterDesign மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

Most Popular

Recent Comments