2019 இன்ஸ்டாகிராம் ரிச் லிஸ்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் விராட் கோஹ்லி!!
ஒவ்வொரு வருடமும் இணையதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகளவில் உள்ள பணக்கார பட்டியலை கணக்கிடும் அந்த வகையில் இந்த வருடம் 2019ல் பிரியங்கா சோப்ரா மற்றும் விராட் கோலி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெரும் இந்தியர்கள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் பிரியங்கா சோப்ரா 19வது இடத்தையும் விராட் கோலி 23வது இடத்தையும் பிடித்துள்ளனர.
பிரபலங்கள், விளையாட்டு பிரமுகர்கள் மற்றும் பிறர் இன்ஸ்டாகிராமில் அவர்கள் பதிவிடும் ஒவ்வொரு விளம்பர பதவிற்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது இந்த பட்டியல்.
பிரியங்கா ஒரு பதிவிற்கு 271,000 டாலர்(1.86 கோடி) சம்பாதித்து 19 வது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில், விராட் ஒரு பதிவிற்கு 196,000 டாலர்(1.35 கோடி) சம்பாதித்து 23 வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் ரியாலிட்டி டிவி நட்சத்திரம் மற்றும் ஒப்பனை மொகுல் கைலி ஜென்னர் முதலிடம் பிடித்திருக்கிறார்.
பட்டியலில் உள்ள மற்றவர்களில் பாடகர்களான அரியானா கிராண்டே, டெய்லர் ஸ்விஃப்ட், கர்தாஷியன்-ஜென்னர் குலத்தின் மற்றவர்கள் மற்றும் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்ளனர்.
நடிகர் பிரியங்கா சோப்ரா பாடகர் கணவர் நிக் ஜோனாஸுடன் புளோரிடாவின் மியாமியில் விடுமுறைக்கு வந்திருந்தார். பிறந்தநாள் விடுமுறையில் இருக்கும் பிரியங்காவுடன் தாய் மது சோப்ரா மற்றும் உறவினர் பரினிதி சோப்ரா ஆகியோர் இணைந்தனர்.
சமீபத்திய சில மாதங்களில், பிரியங்கா பைலட் பேனாக்கள் மற்றும் ஒபாகி மெடிக்கல் போன்ற தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளார். யுனிசெஃப் தூதராக தனது செயல்பாடுகளை ஊக்குவிக்க தனது இன்ஸ்டாகிராம் கணக்கையும் பயன்படுத்துகிறார்.
இவருக்கு 43.3 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். விராட் கோலியை 38.2 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.