போனி கபூர் தயாரித்து அஜித் குமார் நடிக்கும் படம் “நேர்கொண்ட பார்வை”. ஹிந்தியில் பிங்க் படத்தின் ரீமேக் ஆன இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்த படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். வித்யா பாலனின் முதல் தமிழ் படம் இது. படத்தில் பணியாற்றுவது குறித்து நடிகர் வித்யா பாலன் கூறுகிறார்.
ரீமேக் படங்கள் பிடிக்காது
வித்யா பாலன் ரீமேக்கை விரும்புவர் அல்ல. உண்மையில், ரீமேக் கலாச்சாரத்தை அவர் வெறுக்கிறார், ஏனென்றால் இது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வசதியான வழி என்று நம்புகிறவர் அவர். ரீமேக் படங்களிலிருந்து அவர் விலகி இருப்பதற்கான காரணம் இதுவே. தயாரிப்பாளரான போனி கபூர் பிங்கை தமிழில் ரீமேக் செய்யும் யோசனையைப் பகிர்ந்து கொண்டபோது, அவரது உடனே கேட்டது “நீங்கள் ஏன் அதை ரீமேக் செய்கிறீர்கள்?” ஆனால் இப்போது, நேர்கொண்ட பார்வை படத்தில் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார்.
முதல் தமிழ் படம்
“மொழி தெரியாத காரணத்தால் இந்தியில் பார்க்காத பார்வையாளர்களுக்கு இந்த படம்” என்று வித்யா பாலன் கூறுகிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தில் வித்யா பாலன் நடிக்க ஒப்பு கொண்டார். “நேர்கொண்ட பார்வை”யில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். “போனிஜி தயாரித்து அஜித் நடிக்கும் எனது முதல் தமிழ் படம் இது” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வித்யா பாலன்.
துணிச்சலான நடிகை
பாலிவுட்டில், வித்யா ஒரு துணிச்சலான நடிகையாக வலம் வருபவர், அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருந்திருப்பார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சிறியது என்றாலும் சிறப்பானது. வித்யா பாலன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோதிலும் போனி கபூர் அவரிடம் நேரில் சென்று ‘நீங்கள் வெவ்வேறு காரணத்தால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தீர்கள், இந்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பான ஒன்று’ என்று கூறியதாக வித்யா பாலன் விவரித்தார். ”நேர்கொண்ட பார்வையின் டிரெய்லரில் வித்யா பாலனின் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை இருபின்னும் இவரது இந்த கதாபாத்திரம் படத்திற்கு பலம் பொருந்தியதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
பிங்கிலிருந்து வேறுபட்டது
வித்யா தனது கதாபாத்திரத்தைப் மிகவும் பாதுகாத்து வருகிறார், அவர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என்பது வெளிப்படையான ஒன்று. ஆனால் பிங்கைப் பார்த்தவர்களுக்கு, வித்யா பாலன் கதாபாத்திரம் பற்றி தெரியும் என நினைத்தால், ஆனால் வித்யா இதை ஒப்புக்கொள்ளவில்லை “எனது கதாபாத்திரம் பிங்கிலிருந்து வேறுபட்டது. எனக்கு ஒரு பாடலும் இந்த படத்தில் உள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த படம் மிகவும் பொருந்தும்
கடந்த ஆண்டு இந்தியாவில் #MeToo மிகவும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இருப்பினும் அதற்கு முன்னரே அமிதாப் பச்சன் ஏற்று நடித்த படம் ‘பிங்க்’. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் கச்சிதமாக தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கு பொருந்தும் என்று வித்யா பாலன் கூறுகிறார். வித்யாவின் கூறுகையில் படத்தில் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்து சொல்ல படத்திற்கு ஒரு வலுவான நடிகர் தேவை அதற்கு அஜித் குமார் தான் பொருந்துவார். அஜித் ஒரு பெரிய நட்சத்திர நடிகர், மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரிடமிருந்து இந்த படத்தின் செய்தி வரும்போது, அது ஒரு பரந்த பிரிவுக்குச் செல்லும்” என்கிறார் வித்யா.
மகாநதி படம் பிடிக்கும்
“பிங்க் படத்தை விட நேர்கொண்டப் பார்வை படம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் நான் இந்த படத்தில் நடிக்கிறேன்… உண்மையில் நான் பிங்க் படம் பார்ததில்லை, ஆனால் வினோத் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் சில இடங்களில் மிகவும் துல்லியமாக வேலை செய்தார்” என்று நேர்கொண்ட பார்வை படத்தில் தனக்கிருக்கும் கண்ணோட்டத்தை தெரிவித்தார் வித்யா. சமீபத்தில் அவர் பார்த்த தமிழ் திரைப்படம் மகாநதி.
எளிமையானவர் அஜித்
அஜித்தின் தனித்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரை முதன் முதலில் பார்த்த பொது மிகவும் வியந்தேன், ஏனெனில் வெறித்தனமாக ரசிகர்கள் விரும்பும் ஒருவர் இவ்வளவு எளிமையாக இருப்பதும், எளியமையாக செயல்படுவதும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தேன். அஜித் அவர்களை படத்தில் பார்த்ததற்கு நேரில் பார்த்ததற்கு வித்யாசம் அதிகம்” என்று கூறினார்.
மாற்றத்தின் காற்று
“சமுதாயத்திலும் திரைப்படங்களிலும் பெண்களின் நிலைமை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில், பெண்கள் ஒரு வலுவான கருத்தை முன்வைத்து தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு போக்கு என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் இது விரைவில் உண்மையாகிவிடும், ”என்று அவர் கூறுகிறார்.