நடிகர் விஜய் நடித்து அட்லீ இயக்கும் படம் ‘பிகில்’. அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
பெண்களை கௌரவிக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களில் மெர்சல் பட தயாரிப்பாளர் மற்றும் தேனான்டாள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
இந்த பாடல் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அர்ப்பணிப்பு என்றும், அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் ஹேமா ட்வீட் செய்திருந்தார்.
மெர்சல் 2017 இல் வெளியானது மற்றும் இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.