பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, தமிழில் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார்.
2014ல் வெளியான இந்த படம் தமிழில் வெளியான ‘மோஷன் கேப்சர் கம்ப்யூட்டர் அனிமேஷன் ஆக்ஷன் ஃபிலிம்’. இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் எழுதி சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இது இந்தியாவின் முதல் ஒளிச்சேர்க்கை மோஷன் கேப்சர் படமாகும். பொறாமை கொண்ட ஆட்சியாளரால் தனது ராஜ்யத்தில் ஒரு நல்ல மனம் படைத்த தனது தந்தைக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத தண்டனையை கண்ட பின்னர் பழிவாங்கும் 8 ஆம் நூற்றாண்டு வீரனின் தேடலை இந்த கதை கூறுகிறது.
இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்தார். தற்போது இவர் ரன்வீர் சிங் நடித்து வரும் ’83’ படத்தில் ரன்வீரின் மனைவியாக நடிக்கின்றார். இந்த படத்தில் ரன்வீர் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
நடிகை தீபிகா படுகோனே #MeToo குற்றம் சாட்டப்பட்ட இயக்குனர் லவ் ரஞ்சனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் தீபிகா, ரன்பீர் கபூருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு லவ் ரஞ்சன் வீட்டை விட்டு வெளியேறியதைக் கண்டு இணையத்தில் ரசிகர்கள் லவ் ரஞ்சனின் புதிய படத்தில் இவர் நடிக்கிறார் என்று எண்ணியதால். தீபிகா, லவ் ரஞ்சனுடன் பணிபுரிந்தால், அது ரசிகர்கள் அவர் மேல் இருக்கும் நற்பெயரை கெடுப்பது போல் ஆகிவிடும். பல எண்ணிக்கையிலான பாலியல் துன்புறுத்தல்களில் குற்றம் சாட்டப்பட்ட லவ் ரஞ்சனுடன் வேலை செய்ய வேண்டாம் என்று தீபிகா படுகோனிடம் கேட்டுக்கொண்ட ரசிகர்கள் டுவிட்டரில் #NotMYDeepika என்ற ஹாஷ்டாக்கை பகிர ஆரம்பித்து விட்டனர். இந்த ஹாஷ்டாக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு ரசிகர் டுவிட்டரில் “குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருடன் நீங்கள் நடிக்கும்போது, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைப்பது மட்டுமல்ல, உங்களின் மாண்பையும் இழக்கிறீர்கள். ஒரு கலைஞராக உங்களது மதிப்பை நீங்கள் இழக்க நேரிடும் தீபிகா. இதை தயவு செய்து செய்யாதீர்கள்” என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் இது போன்ற டுவீட்களை பகிர்ந்து வருகின்றனர்.
லவ் ரஞ்சன் இயக்கும் படத்தில் தீபிகாவிற்கு ஜோடியாக ரன்பீர் கபூர் நடிக்கின்றார். அவருக்கு எதிராக ரசிகர்கள் இதுப்போன்ற கோரிக்கைகளை வைக்கவில்லை. பாலிவுட் திரைப்படங்கள் பலவற்றை இயக்கிய லவ் ரஞ்சன் மீது சென்ற ஆண்டு ஒரு நடிகை #MeToo குடச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். 2011 ஆம் ஆண்டு ரஞ்சன், “பியார் கா பஞ்சனாமா” என்ற படத்தை இயக்கும் முன் தான் ஆடிஷன் சென்றதாகவும், அந்த ஆடிஷன் போது ரஞ்சன் உள்ளாடையுடன் நிற்குமாறு சொன்னதாகவும் அந்த நடிகை புகார் சொன்னார்.