ஜூலை 22 ம் தேதி, இந்தியாவின் இரண்டாவது சந்திரன் பயணமான சந்திரயான் -2 பிற்பகல் 2:43 மணிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
அனைத்து இந்தியர்களுக்கும் இது ஒரு பெருமையான தருணம் மற்றும் பல பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெற்றிகரமாக விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதற்கு இஸ்ரோ குழுவை வாழ்த்தினர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அத்தகைய வாழ்த்துக்களில் ஒன்று பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ்.
பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராமில், விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு,அதில் “ஹலோ டார்லிங்ஸ்! இஸ்ரோவின் சந்திரயான் -2 வெற்றி பெற்றதால், இந்தியர்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான நாள். ராகெட் அதன் மேக்னம் ஓபஸ் அளவிற்காகவும், தயாரிப்பில் பல ஆண்டுகள் கடின உழைப்பிற்காகவும், முதன் முதலில் அதிக டன்களை எடுத்துச் செல்லும் அதன் திறனுக்காகவும் பாகுபலி என்று கருதப்படுவதால் முழு பாகுபலி அணிக்கும் இது ஒரு கூடுதல் மரியாதை ” என்று தலைப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B0NsgoVHzMp/?utm_source=ig_web_copy_link
2015 ஆம் ஆண்டின் வெளியான பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ள இப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும், சாதனை படைத்த பாக்ஸ் ஆபிஸையும் பெற்றது! இதைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியான பாகுபலி 2 வெளியாகி முதல் பாகத்தின் சாதனையை முறியடித்தது.