V4UMEDIA
HomeNewsBollywood"சந்திரனில் தேசிய கொடி"... ஹர்பஜன் சிங்கின் வைரல் டுவீட்!!

“சந்திரனில் தேசிய கொடி”… ஹர்பஜன் சிங்கின் வைரல் டுவீட்!!



ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுத்தளத்திலிருந்து, திட்டமிட்டப்படி ஜூலை 22 ஆன நேற்று பகல் 2.43 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 3.8டன் எடை கொண்ட இந்த சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் கொண்டு சென்று, புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. சிறிது காலம் இந்த புவி வட்ட பாதையை சுற்றி வரும் இந்த விண்கலம் பின்னர் நிலவின் புவி வட்டப் பாதைக்கு மாறிப் பயணித்து சந்திரனில் ரோவர் ஆய்வு களத்தில் தரையிறங்கும்.

Image result for harbhajan singh tweet about chandrayaan 2


சந்திரயான் -2 விண்கலம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோவிற்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், வீரேந்திர சேவாக், கேப்டன் விராட் கோலி, புஜாரா என பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வரிசையில் ஹர்பஜன் சிங் எப்போதும் வித்யாசமாக டுவீட் செய்வார்… வித்யாசமாக டுவீட் மட்டுமின்றி அதில் இடம் பெரும் வசனங்களும் எப்போதும் வித்யாசமாக இருக்கும். இவர் தன் வாழ்த்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியில், சந்திரனைக் கொண்டுள்ளன. ஆனால், சில நாடுகளின் தேசியக் கொடி மட்டும் தான், சந்திரனில் உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments