’96’ என்பது தமிழ் ரசிகர்களின் மனதில் நிற்கும் படங்களில் ஒன்றாகும். பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
’96’ படம் முன்னதாக கன்னடத்தில் ’99’ என ரீமேக் செய்யப்பட்டது. இதில் கணேஷ் மற்றும் பவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் சமந்தா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜூன் மாதம் படத்திற்கான ஸ்கைடிவிங் காட்சி படப்பிடிப்பின் போது ஷர்வானந்த் சந்தித்த விபத்து காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டாக்டர்கள் அவரை 2 மாதங்கள் முழுமையாக ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர், இப்போது, செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டா மூலமாக, ’96’ ஸ்கிரிப்ட்டுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை பிரேம் குமார் இயக்கியுள்ளார்.