‘3’ படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் மூலம் உலகெங்கிலும் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தனது இசையால் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். சூப்பர் ஸ்டார் அவர்கள் இவரின் இசை குறித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இவர் ‘தும்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார். தற்போது இவர் பிரிட்டிஷ் எம்பையர் மற்றும் சொர்க்கம் வழங்கும் ‘மரண மாஸ் திருவிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய பீச் பார்ட்டியாக இது இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் செண்டோசா பவன் கிரீனில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போஸ்டரை நடிகர் தனுஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ” பெரும் நிகழ்வு, தவறவிடாதீர்கள்!!” என பகிர்ந்துள்ளார்.















