விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் மாபெரும் வரவேற்ற்பாய் பெற்றது . இந்த படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்தவர் தான் கௌரி கிஷன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அனுக்கிரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது.
![](http://v4ucinema.com/wp-content/uploads/2021/02/image-59.jpeg)
தற்போது, ‛ஹாய் ஹலோ காதல்’ என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இந்தப்படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஜூன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான நடிகர் சர்ஜுனோ காலித் கதாநாயகியாக நடிக்கிறார்.
![](http://v4ucinema.com/wp-content/uploads/2021/02/image-60.jpeg)
மலையாளத்தில் இளம் பாடலாசிரியராக வலம் வரும் விநாயக் சசிகுமார் இயக்குவதன் மூலம் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்கிறார். இவர் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ், அதிரன், வரதன் ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.