V4UMEDIA
HomeNewsKollywood"கல்வி சூதாட்டத்திற்குள் செல்லக்கூடாது .." - சூர்யாவின் ஊக்கமளிக்கும் அறிக்கை!!

“கல்வி சூதாட்டத்திற்குள் செல்லக்கூடாது ..” – சூர்யாவின் ஊக்கமளிக்கும் அறிக்கை!!






நடிகர் சூர்யா சமீபத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு மற்றும் மிகவும் விவாதிக்கப்பட்ட மூன்று மொழிக் கொள்கை போன்ற பிற கல்வி ஏற்பாடுகள் குறித்து தனது உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அகரம் அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவின் போது அவர் ஆற்றிய உரையில் கொள்கைகளை விமர்சித்தார், இது நலிந்த மாணவர்களை மனதில் வைத்து என்இபி (NEP) வரைவு செய்யப்படவில்லை என்றும், 3 மொழி கொள்கை மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டிருந்தார்.


அண்மையில் சூர்யா புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சூர்யா அவர்கள், கல்வி முறை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக பிளவுகளை குறைக்க வேண்டும் என்றும், அதைப் பெறுவதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். “பணம் இருந்தால் விளையாடு என சொல்லும் சூதாட்டம் அளவிற்கு கல்வி ஒரு சூதாட்ட முறையாக மாறக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.அந்த அறிக்கையில், இந்த மாத இறுதிக்குள் (ஜூலை) அரசாங்கத்தால் நடத்தப்படும் வலைத்தளத்தில் (https://innovate.mygov.in/new-education-policy-2019/) தங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பவும் சூர்யா மக்களை வலியுறுத்தியிருக்கிறார்.

Most Popular

Recent Comments