நடிகை பிரியங்கா சோப்ரா தனது 37 வது பிறந்த நாளை மியாமியில் ஜூலை 18ஆம் தேதி கொண்டாடினார். இவரது பிறந்தநாள் அன்று நிக் ஜோனாஸை விட உயரமான ஐந்து அடுக்கு கேக்கை வெட்டினார். இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ மற்றும் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
மியாமியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது தாய் மது சோப்ரா மற்றும் அவரது சகோதரியும் நடிகையுமான ப்ரனிதி சோப்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
இன்ஸ்டாகிராமில் ‘ஜே சிஸ்டர்ஸ்’ பிரியங்கா ரசிகர் மன்றம் பகிர்ந்த படங்களில், பிரியங்காவின் கணவர் நிக், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்று உள்ளனர். இவர் அருகில் பெரிய பிறந்தநாள் கேக் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. பிரியங்கா சிவப்பு நிற உடை அணிந்திருந்தார், கேக்கின் நிறமம் அவருடைய பிறந்தநாள் உடையின் நிறமும் ஒன்றாக இருந்தது.
பிரியங்கா தலையில் ‘பிறந்தநாள் பெண்’ என்ற தலைப்பாகை அணிந்திருந்தார்.
முந்தைய நாள், நிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், “எனது உலகின் வெளிச்சம். என் முழு இதயம். ஐ லவ் யூ பேபி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார். ப்ரனிதி இன்ஸ்டாகிராமில், “ மியாமியில் பிறந்தநாள் பெண்ணுடன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிமி தீதி. உங்களைப் ஓருவர் உலகில் எங்கும் கிடைக்க மாட்டார்”.பிரியங்காவின் மைத்துனர், கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் சோஃபி டர்னரும், இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார். அவர், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் சகோதரி … ஐ லவ் யூ.” என்று எழுதியிருந்தார். பிரியங்காவின் மாமியார் டெனிஸ், “ஒரு அழகான பெண்ணுக்கு அழகான பிறந்த நாள்! லவ் யூ தில் ” என்று பதிவிட்டார்.