பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். 16 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஹவுஸ்மேட்ஸ் போட்டியாளர்களை எவிக்ஷனில் தேர்ந்தெடுப்பர். அவர்களில் ஒருவர் அந்த வாரத்தில் எலிமினேட் ஆவர். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் 3ல் இந்த வார எவிக்ஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீரா மிதுன், சரவணன், சேரன், அபிராமி மற்றும் மோகன் வைத்யா. இவர்களில் மீரா மிதுன் மேல் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் குற்றம் சாட்டியதால் இந்த வார எவிக்ஷனில் அவர் தான் எலிமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் சனிக்கிழமை அன்று கமல் அவர்கள் காண்பித்த குறும்படம் மூலம் மீராவின் மேல் எந்த வித தவறும் இல்லையென தெரியவந்தது இதை தொடர்ந்து இந்த வார எவிக்ஷனில் இருந்து மீரா மிதுன் காப்பாற்றப்பட்டார்.
இந்த சீசனில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார் எலிமினேஷன் தொடர்ந்து, இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் மூன்றாவது போட்டியாளர் மோகன் வைத்யா.