சிறுத்தை சிவா விஸ்வாசத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அஜித் குமார் இயக்குனர் எச்.வினோத்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அமிதாப் பச்சன், டாப்ஸி, ஆண்ட்ரியா தாரியங் மற்றும் பலர் நடித்த 2016ல் வெளிவந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் “நேர்கொண்ட பார்வை”.
தயாரிப்பாளர்கள் ஏற்கனவே ட்ரெய்லரையும், படத்தில் இருந்து இரண்டு பாடல்களான ‘வானில் இருல்’ மற்றும் ஈ.டி.எம் டிராக் ‘களம்’ வெளியிட்டிருந்தனர். இது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘தீ முகம் தான்’ என்ற தலைப்பில் நேர்கொண்ட பார்வையின் தீம் பாடல் ஜூலை 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அவர், “ஒரு தீம் பாடல் இல்லாமல் எந்த கதையும் எப்போதும் நிறைவடையாது! #TheeMugamDhaan, இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்” என பதிவிட்டிருந்தார்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் துறையை முறையே நீரவ் ஷா மற்றும் கோகுல் சந்திரன் கையாளுகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.