Review By :- V4uMedia Team
Release Date :- 19/07/2019
Movie Run Time :- 2.01 Hrs
Censor certificate :- U/A
Production :- RKFI Films
Director :- Rajesh Selva
Music Director :- Ghibran
Cast :- Vikram , Akshara Haasan, Abi Hassan, Lena , Vikas , Jasmine , Cherry , Rajesh Kumar , Ravindra , Puravalan , Siddhartha
மலேசியாவில் வசிக்கும் இளம் ஜோடிகளாக வருகின்றனர் அபி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். மருத்துவரான அபி ஹாசன் பணிபுரியும் மருத்துவமனையில் ஆக்சிடென்ட் ஆகி அட்மிட் செய்யப்படுபவர் தான் விக்ரம். இவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அபி ஹாசனை மிரட்டுகிறது மர்ம கும்பல். அதற்கு பனைய கைதியாக மாறுபவர் தான் கர்பிணி பெண்ணான அக்ஷரா ஹாசன்.
அக்ஷரா ஹாசன் மீட்கப்படுகிறாரா இல்லையா, என்பதை பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளில் காண்பிக்கிறார் இயக்குனர். யார் இந்த விக்ரம்?. படத்துக்கு மிகப் பெரும் பலம் விக்ரம் தான். மிகவும் ஸ்டைலிஷ் ஆன லுக்கில் படம் முழுவது வரும் இவர், ரசிகர்களை கவர்த்திழுக்கிறார். படத்தின் முதல் பாகத்தில் அமைதியாக வரும் விக்ரம், இரண்டாம் பாகத்தில் தூள் கிளப்பியருக்கிறார். விக்ரம் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய ட்ரீட்.
இந்த படம் அபி ஹாசனுக்கு ஒரு நல்ல அறிமுகம்.மனைவையுடன் இருக்கும் காட்சிகளிலும் சரி, மனைவியை இழந்து தவிக்கும் கணவனாகவும் சரியாக பொருந்துகிறார். அக்ஷரா ஹாசன் நடிப்பில் வழக்கம் போல் எந்த குறையும் இல்லை.
படத்திற்கு மிக பெரிய பலமே இசை தான். படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான், பின்னணி இசையில் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு இடங்களிலும் ஆக்ஷன் காட்சிகள், சண்டை காட்சிகள் என படத்தின் வீரியத்தை டபுள் மடங்காக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றம் அடைய செய்யாமல், படத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறப்பாக செய்திருக்கின்றனர். சேசிங் சீன்களில் ஹாலிலிவுட் படம் அளவிற்கு காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாசா ஆர்.குதா. ரசிகர்கள் மற்றும் மக்களின் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் இன்று கடாரம் கொண்டான் அள்ளிச்சென்றுள்ளது.