ஆடை படத்தை “மேயாத மான்” புகழ் ரத்னகுமார் இயக்குகிறார். இந்த படத்தை வி. ஸ்டுடியோஸ் கீழ் விஜி சுப்ரமணியம் தயாரிக்கிறார். இதில் பிரதீப் குமாரும், அவரது பேண்ட் ஓர்காவும் இசையமைக்கிறார்கள், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவை கையாள்கிறார். ஷபிக் முகம்மது அலி, எடிட்டிங் செய்கிறார்.
நிதி பிரச்சனை காரணமாக இந்த படத்தின் காலை காட்சி, பத்திரிகையாளர் சிறப்புக் காட்சிகள் நிறுத்தப்பட்டன. பின் நிதி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ‘ஆடை’ படம் திரையரங்குகளில் மாலை 6 மணி காட்சியில் ரிலீசானது. இதை தொடர்ந்து அமலா பால் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதும் மாலை 6 மணிக்கு ‘ஆடை’ படம் ரிலீசாகிறது. காத்திருந்ததற்கு இப்படம் தகும் என உறுதியளிக்கிறோம். நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி’ என தெரிவித்திருந்தார்.
அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தில், ‘பல சாப சொற்கள், தூய்மையற்றவள் பட்டம், கேரக்டரை கெடுத்து, தவறான கருத்துகளை பரப்பி, KDM பிரச்சனை உட்பட அனைத்தையும் கடந்து, உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.