நடிகை தமன்னா, இயக்குனர் விஜயின் தேவி 2 படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடியாக கடைசியாக திரையில் காணப்பட்டார். தற்போது இவர் நடிக்கும் படத்தில் யோகி பாபு, ராமதாஸ், மன்சூர் அலிகான் மற்றும் சின்னத்திரை நடிகர்-நடிகையரும் இணைந்து நடிக்கிறார்கள்.
பெட்ரோமாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், தனது பெயரிலேயே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. நேற்று இந்த திகில் காமெடி படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அந்த படக்குழு மற்றுமொரு சுவாரஸ்யமான அறிவிப்பு என்னவெனில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்திருக்கிறது. இதைவிட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த போஸ்டரில் முழு வீடும் தலைகீழாக மாறியதாகத் தோன்றினாலும், தமன்னா வசதியாக நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. இந்த போஸ்டரை காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்தை ‘அச்சம் என்பது மடமையடா’ பட ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டான் மெக் ஆர்தர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு ‘விக்ரம் வேதா’ கலை இயக்குனர் வினோத் படத்தின் தயாரிப்பு டிசைனை கையாளுகிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.