அண்மையில், அகரம் அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவையொட்டி நடிகர் சூர்யா செய்தியாளர் சந்திப்பில் தேசிய கல்வி கொள்கை (NEP), நீட் தேர்வுகள் மற்றும் மிகவும் விவாதிக்கப்பட்ட 3 மொழிக் கொள்கை ஆகியவற்றின் வரைவை விமர்சித்தார்.
நலிந்த மாணவர்களை மனதில் வைத்து என்இபி (NEP) வரைவு செய்யப்படவில்லை என்றும், 3 மொழி கொள்கை மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டிருந்தார். சூர்யாவின் கருத்துக்கள் ஆளும் அரசியல் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விமர்சனங்களை வரவழைத்தது.
இந்த சமீபத்திய சம்பவத்தை அடுத்து, நடிகர் கமல்ஹாசன் சூர்யாவின் கருத்துக்களுக்கு ஆதரவை தெரிவித்ததோடு, நடிகருக்கு எதிராக ஆளும் கட்சி தெரிவித்த கருத்துக்களையும் கண்டித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசிய, தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்த ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவரம் நடிகருமான கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சூர்யா அறிக்கையில், ” வணகத்திற்குரிய திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம்,
கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் ‘மக்கள் நீதி மையம்’ அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்.
திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்வி பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது.
தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் ” என அந்த மடலில் அவர் விவரித்திருந்தார்.