தென்னிந்திய பெண்களின் விருப்பமான நடிகர் விஜய் தேவர்கொண்டா, இவரது வரவிருக்கும் ‘டியர் காமரேட்’ படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. பாரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார், இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தை நவீன் யெர்னேனி, y. ரவிசங்கர், மோகன் செருகுரி (CVM), மித்ரி மூவி மேக்கர்ஸ் யஷ் ரங்கினேனி மற்றும் பிக் பென் சினிமாஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர். சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் எடிட்டிங்கை ஸ்ரீஜித் சாரங் கையாளுகிறார்.
படத்தின் டீஸர் இந்த ஆண்டு தொடக்கத்திலும் மற்றும் படத்தின் டிரெய்லர் சமீபத்திலும் வெளியிடப்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான இந்த டிரெய்லர் சமூக ஊடக தளங்களில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
https://www.instagram.com/p/B0BSkTJhmSN/?utm_source=ig_web_copy_link
படத்தின் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், விஜய் தேவர்கொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீஸரைப் பகிர்ந்து, “காமரேட் கீதம் (Comrade Anthem) ஜூலை 18 காலை 11:11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார். இதில் சுவாரஸ்யமான விஷயமே மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி’ மற்றும் நடிகர் ‘துல்கர் சல்மான்’ ஆகியோர் இந்த பாடலை பாடியிருக்கின்றனர்.